Skip to content
Human Rights Measurement InitiativeHuman Rights Measurement Initiative
  • தமிழ்
    • English
    • Français
    • Español
    • Português
    • Русский
    • 简体中文
    • العربية
    • हिन्दी
    • 한국어
    • বাংলাদেশ
    • ไทย
    • Tiếng Việt
    • 繁體中文
    • Bahasa Indonesia
    • සිංහල
  • Use our dataExpand
    • Go to the Rights Tracker
  • See our impact
  • Get involved
  • About HRMIExpand
    • The team

  • தமிழ்
    • English
    • Français
    • Español
    • Português
    • Русский
    • 简体中文
    • العربية
    • हिन्दी
    • 한국어
    • বাংলাদেশ
    • ไทย
    • Tiếng Việt
    • 繁體中文
    • Bahasa Indonesia
    • සිංහල

Human Rights Measurement InitiativeHuman Rights Measurement Initiative

கருத்தாய்வுக்குப் பதிலளிப்பவர்களுக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

  • English
  • Français
  • Español
  • Português
  • Русский
  • 简体中文
  • العربية
  • हिन्दी
  • 한국어
  • বাংলাদেশ
  • ไทย
  • Tiếng Việt
  • 繁體中文
  • Bahasa Indonesia
  • தமிழ்
  • සිංහල

HRMI? Her-me? Her-mi?

‘மனித உரிமைகள் அளவிடல் முன்னெடுப்பு’ என்பது சற்றுப் பெரிய பெயர்தான். அதனால் நாங்கள் அதைச் சுருக்கமாக HRMI என்று அழைக்கிறோம், இது ‘her-mee’ (ஹெர்-மீ) என்று உச்சரிக்கப்படுகிறது.

“நாடுகளின் மனித உரிமைகள் செயல்திறனை ஒப்பிடும் தரவானது அரசாங்கங்களைப் பொறுப்பேற்கச் செய்வதற்கான ஒரு பயனுள்ள வழியாகும். மனித உரிமைகள் அளவிடல் முன்னெடுப்பின் பணி, மிகச் சிறந்த சாத்தியமுள்ள தரவை உருவாக்கவும், பகிர்ந்துகொள்ளவும், மற்றும் முடிவுகளைப் பயன்படுத்தவும் எல்லா இடங்களிலும் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பைச் சார்ந்திருக்கிறது.”

– கென் ரோத், நிர்வாக இயக்குனர், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு

HRMI என்பது நாடுகளின் மனித உரிமைகளின் செயல்திறனைக் கண்காணிக்கும் முதல் உலகளாவிய திட்டமாகும். நாம் இதனை மேற்கொள்ளும் பிரதான வழிகளில் ஒன்றாக இருப்பது, எங்களின் வருடாந்திர HRMI கணக்கெடுப்பு மூலம் வருடாந்திர தரவுகளை சேகரித்தல் ஆகும்.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் நிர்வாக இயக்குனர் கென் ரோத் சொல்வதுபோல், “நாடுகளின் மனித உரிமைகள் செயல்திறனை ஒப்பிடும் தரவானது அரசாங்கங்களைப் பொறுப்பேற்கச் செய்வதற்கான ஒரு பயனுள்ள வழியாகும். மனித உரிமைகள் அளவிடல் முன்னெடுப்பின் பணி, மிகச் சிறந்த சாத்தியமுள்ள தரவை உருவாக்கவும், பகிர்ந்துகொள்ளவும் மற்றும் முடிவுகளைப் பயன்படுத்தவும் எல்லா இடங்களிலும் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பைச் சார்ந்திருக்கிறது.”

எங்கள் தரவுத் திரட்டலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளின் மிகச் சமீபத்திய பட்டியலுக்கு, இடம்பெற்றுள்ள நாடுகள் என்ற பக்கத்தைத் தயவுசெய்து பாருங்கள்.

இந்தக் கருத்தாய்வு எப்படி நடக்கிறது, மற்றும் நீங்கள் இதில் எப்படிப் பங்கேற்கலாம் என்பது பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எந்த ஒரு நாட்டினதும் ஒட்டுமொத்த மனித உரிமைகள் சூழலைப்பற்றிய மிகத் துல்லியமான தகவல்களை உள்ளூர் மற்றும் பிராந்திய மனித உரிமை பணியாளர்களால்தான் வழங்க இயலும்.

நாங்கள் ஒரு சிறப்பு இணையக் கேள்வித்தாளை உருவாக்கியுள்ளோம், உலகெங்கும் உள்ள மனித உரிமை பணியாளர்களிடம் அவர்களுடைய அரசாங்கம் அவர்களுடைய நாட்டில் மனித உரிமைகளை எந்த அளவுக்கு நன்றாக மதிக்கிறது என்பது பற்றிய ஒரே விதமான கேள்விகளைக் கேட்கிறோம்.

எங்களுடைய முறைமை ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புத் தலைவர் டாக்டர் K சட் கிளே தலைமையில் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் அரசியல் அறிவியலாளர்களுடைய குழு ஒன்று இந்தக் கருத்தாய்வைக் கவனமாக வடிவமைத்துள்ளது. இந்தக் கருத்தாய்வுக்குப் பதிலளிப்போரிடமிருந்து வரும் தரவுகளையும் இந்தக் குழுதான் பகுத்தாயவுள்ளது. இவர்கள் மேம்பட்ட புள்ளியியல் உத்திகளைப் பயன்படுத்தி, நாடுகளுக்கிடையிலான ஒப்பிடும் தன்மையை உறுதிசெய்வார்கள், ஒவ்வொரு நாட்டு மதிப்பெண்ணுக்கும் உறுதித்தன்மை அளவீடுகளைக் கணக்கிடுவார்கள். கருத்தாய்வு முறையைப் பற்றிய மேலதிக விபரங்களை இங்கு வாசிக்க முடியும்.

இந்தக் கருத்தாய்வில் பங்கேற்கும் மனித உரிமை பணியாளர்களுடைய எண்ணிக்கை பெருகப் பெருக, இந்தத் தரவு மேலும் வலுவாகும்.

HRMI ஆண்டுதோறும் நடத்தும் தரவு திரட்டலில் பங்கேற்பது அனைவருக்கும் வெற்றியைத் தரும் செயல்பாடாகும். நீங்கள் 30 முதல் 60 நிமிடங்களைச் செலவிட்டு உங்களுடைய அறிவை எங்களுடன் பகிர்ந்துகொண்டால், மனித உரிமைகள் சூழலைச் சுதந்தரமாக விவரிக்கின்ற, உலக அளவில் முன்னிலை வகிக்கின்ற தரவும் அளவீடுகளும் உங்கள் நாட்டுக்குக் கிடைக்கும். இந்தக் கருத்தாய்வில் பங்கேற்கும் மனித உரிமை பணியாளர்களுடைய எண்ணிக்கை பெருகப் பெருக, இந்தத் தரவு மேலும் வலுவாகும்.

எங்களுடைய தரவுகள் அனைத்தையும் யார் வேண்டுமானாலும் இலவசமாக அணுகலாம். இது எங்களுடைய உரிமைகளை கண்காணித்தல் பக்கத்தில் கிடைக்கிறது.

மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் எங்கள் தரவுகளையும், அவர்களுடைய சொந்தப் பணியிலிருந்து கிடைக்கும் மற்ற சான்றுகளையும் பயன்படுத்தி, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைத் தங்களுடைய அரசாங்கங்களிடம் காண்பிக்கலாம், மற்றும் அதேபோன்ற நாடுகளுடன் ஆரோக்கியமான போட்டியைக்கூட உருவாக்கலாம்.

எங்களது கருத்தாய்வில் பதிலளிக்கும் நபர்கள் நாங்கள் தரவுகளை சேகரிக்கும் நாடுகளில் ஏதேனும் ஒன்றில் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து வருகின்ற மனித உரிமை ஆய்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆவர். நாங்கள் தேடும் நபர்களில் பின்வருபவர்கள் உள்ளடங்குவார்கள்:

  • • கருத்தாய்வு நடைபெறும் நாடொன்றின் குடிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளைக் கண்காணிக்கும் பணியில் உள்ள மனித உரிமை பணியாளர்கள் (ஆய்வாளர்கள், பகுப்பாய்வாளர்கள், ஏனைய செயற்பாட்டாளர்கள்). இவர்கள் ஒரு சர்வதேச அல்லது உள்ளூர் NGO அல்லது சிவில் சமூக அமைப்புக்கு பணியாற்றுகிறவர்களாக இருக்கலாம்.
  • மனித உரிமை வழக்கறிஞர்கள்.
  • கருத்தாய்வு நடைபெறும் நாடொன்றில் மனித உரிமை பிரச்சனைகளைப்பற்றி எழுதும் பத்திரிகையாளர்கள்.
  • கருத்தாய்வு நடைபெறும் நாடொன்றில் தேசிய மனித உரிமைகள் கல்விக் கழகத்தில் (NHRI) பணியாற்றுகிறவர்கள், ஆனால், இதற்கு அந்தக் கல்விக் கழகம் அதன் ஆணையை நிறைவேற்றுவதில் முற்றிலும் சுதந்திரமாக இருப்பது உட்பட பாரிஸ் கொள்கைகளுடன் முழுக்க இணங்கவேண்டும்.

கவலை வேண்டாம் – பெரும்பாலான மக்கள் நாங்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளிலும் வல்லுநர்களாக இருக்கமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

எங்கள் கருத்தாய்வு மாதிரி இதைக் கருத்தில் கொள்கிறது, பதில்கள் பல நிலை வல்லமை கொண்ட மக்களிடமிருந்து வருகின்றன என்று ஊகித்துக்கொள்கிறது. மக்கள் தங்களுக்கு மிகுந்த அறிவு உள்ளதாக நினைக்கிற பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பதிலளிப்பதைவிட, எல்லோரும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்தால் நாம் இன்னும் மேம்பட்ட தரவுகளைப் பெறுவோம் என்னும்படி நாங்கள் இந்தக் கருத்தாய்வை வடிவமைத்துள்ளோம்.

இதற்கான ஒரு மிக நல்ல காரணம், ஒரு தலைப்பில் தங்களுக்கு எவ்வளவு அறிவு உள்ளது என்பதைத் தீர்மானிப்பதில் மக்கள் எப்போதும் மிகச் சிறப்பாக இருப்பதில்லை என்று உளவியல் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளமை ஆகும். மக்கள் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கலாம் என்று நாங்கள் அனுமதித்தால், உதவக்கூடிய தகவல்களை வழங்கக்கூடிய மக்களிடமிருந்து வரக்கூடிய பதில்களை நாம் இழந்துவிடக்கூடும்.

மனித உரிமைகளில் பணியாற்றும் ஒருவர் என்றமுறையில், மனித உரிமைகள்பற்றிய ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் வல்லுநராக இல்லாவிட்டாலும், பெரும்பாலான பகுதிகளில் சராசரி மக்களைவிட உங்களுக்குக் கூடுதலாகத் தெரிந்திருக்கும். அதனால், உங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொண்டு எல்லாக் கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளிக்கவேண்டும் என்று நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். எங்களுடைய முறைமையானது குறிப்பாக கலவையான பதில்களை கையாளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது – சில பதில்கள் மற்றவர்களைவிட வல்லுநர்களாக இருக்கிறவர்களிடமிருந்து வருகின்றன.

பெரும்பாலான சூழ்நிலைகளில், கருத்தாய்வுக்குப் பதிலளிப்போர் எந்த நாட்டைப்பற்றிய தகவல்களை வழங்குகிறார்களோ, அதே நாட்டில்தான் வசிக்கிறார்கள். ஆனால், விதிவிலக்குகள் உள்ளன.

ஒரு நாடு மனித உரிமைப் பாதுகாவலர்களை மிகவும் எதிர்த்தால் (எடுத்துக்காட்டு: சவுதி அரேபியா) அல்லது நெருக்கடியில் இருந்தால் (எடுத்துக்காட்டு: DRC, வெனிசுவேலா), அந்த நாட்டைப்பற்றிப் பதிலளிப்போர் வேறு இடத்தில் வசிக்கும் வாய்ப்புகள் மிகுதியாகின்றன.

அத்துடன், NGOக்களுக்கான மனித உரிமை ஆய்வாளர்களில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் தாங்கள் வசிக்காத நாடுகளைப் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளிக்கும் தகுதி பெறுவார்கள்.

எங்கள் சுதந்தரத்தை உறுதி செய்யவும், கருத்து முரண்களைத் தவிர்க்கவும், நாங்கள் அரசு அலுவலர்கள் அல்லது அரசால் ஒழுங்கமைக்கப்பட்ட NGOக்களில் பணியாற்றுகிறவர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டுவதில்லை.

நாங்கள் முதன்மை வளங்களை அணுகக்கூடிய, பல நேரங்களில் களத்தில் மனித உரிமைகள் தகவலுக்கான முதல் தொடர்புப் புள்ளிகளாக இருக்கிற பதிலளிப்போரைத் தேடுகிறோம். இந்தக் காரணத்தால், நாங்கள் மனித உரிமைக் கல்வியாளர்களை இந்தக் கருத்தாய்வுக்குப் பதிலளிக்க அழைப்பதில்லை. அவர்கள் பின்பற்றுவோராகவும் இருந்து, முதன்மைத்தகவல் மூலங்களுடன் பணியாற்றினால் மட்டும்தான் அவர்களை அழைக்கிறோம்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய மனித உரிமைகள் பற்றிய அறிவானது தங்களுடைய சொந்த அனுபவங்களிலிருந்து மட்டும் வருவதாக இருந்தால், அவர்களையும் நாங்கள் இந்தக் கருத்தாய்வில் சேர்ப்பதில்லை.

கூடாது. கருத்தாய்வுப் பதில்கள் எப்போதும் கருத்தாய்வை நிரப்புகிற நபருடைய அறிவு மற்றும் புரிந்துகொள்ளலை வெளிப்படுத்தவேண்டும், தன்னுடைய சக பணியாளர்களின் ஒட்டுமொத்தப் பார்வையை அல்லது தான் பணியாற்றுகிற நிறுவனத்தின் அலுவல் பூர்வமான நிலையை வெளிப்படுத்தக்கூடாது. தனிநபர்களாக பதிலளிப்போர் எந்த அளவுக்குக் கூடுதலாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு நல்லது. ஏனெனில், வெவ்வேறு மக்கள் வெவ்வேறு அறிவு அடிப்படைகளைக் கொண்டிருப்பார்கள், நாங்கள் இவை அனைத்தையும் பயன்படுத்திக்கொள்கிறோம், இதன் மூலமாக பதில்களின் வேறுபாடுகளைப் பயன்படுத்தி எங்கள் மதிப்பெண்களின் உறுதித்தன்மையின் அளவை எங்களால் கணக்கிட முடிகிறது.

நீங்கள் உங்கள் நாட்டுக்கான கருத்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்றால், பாதுகாப்பான பதிவு/ஒப்புதல் படிவத்துக்கான இணைப்பு ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும். தயவுசெய்து, அதை நிரப்புங்கள். இதற்குச் சுமார் 30 வினாடிகள் எடுக்கும்.

நீங்கள் உங்கள் நாட்டுக்கான கருத்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்றால், பாதுகாப்பான பதிவு/ஒப்புதல் படிவத்துக்கான இணைப்பு ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும். தயவுசெய்து, அதை நிரப்புங்கள். இதற்குச் சுமார் 30 வினாடிகள் எடுக்கும். அதன்பிறகு, பதிவுசெய்த அனைவருக்கும் தனித்துவமான, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கருத்தாய்வு இணைப்பு ஒன்று அனுப்பப்படும்.

நீங்கள் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தால், கருத்தாய்வுக்குப் பதிலளிக்கக்கூடிய மற்ற சக பணியாளர்கள் அல்லது தொடர்பு நபர்களை நீங்கள் பரிந்துரைக்கலாம் என்று நாங்கள் ஊக்குவிக்கிறோம். இதற்கு நீங்கள் உங்களுடைய நாட்டின் HRMI தூதுவரிடம் அவர்களைப் பரிந்துரைக்கலாம், அல்லது, survey@humanrightsmeasurement.org என்ற மின்னஞ்சல் முகவரியில் HRMIக்கு மின்னஞ்சல் எழுதலாம். கருத்தாய்விலும் ஓர் இடம் கருத்தாய்வுக்குப் பதிலளிக்கக்கூடிய மற்றவர்களைப் பரிந்துரைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

கருத்தாய்வு இணைப்புகள் ஃபிப்ரவரி மற்றும் மார்ச்சில் அனுப்பப்படும்.

HRMI கருத்தாய்வு மின்னஞ்சல் தங்களுடைய ஸ்பாம் (spam) என்கிற மின்னஞ்சல் கோப்புரைக்குத் தானாக வடிகட்டப்படுவதாகச் சிலர் எங்களிடம் சொல்லியுள்ளார்கள். இந்த ஆபத்தைத் தவிர்க்க, எங்களுடைய டொமைன் பெயரை (@humanrightsmeasurement.org) உங்களுடைய பாதுகாப்பான அனுப்புநர்கள் பட்டியலில் சேருங்கள். இதைச் செய்வதன்மூலம், கருத்தாய்வு உங்கள் உள்பெட்டியில் (Inbox) வழங்கப்படுவது உறுதியாகும்.

நாங்கள் எங்களுடைய கருத்தாய்வுக்குப் பதிலளிப்பவர்களுடைய பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். பதிவுப் படிவத்தில் நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்படுகின்றன என்பதை நாங்கள் எப்படி உறுதிசெய்கிறோம் என்பதைப்பற்றி நீங்கள் இங்கு படிக்கலாம்.

இந்தக் கருத்தாய்வும் ரகசியமானது, பெயரற்றது. அதனால், உங்கள் பதில்களை யாராலும் உங்கள் பெயருடன் தொடர்புபடுத்த இயலாது.

கருத்தாய்வுக்குப் பதிலளிக்கக்கூடிய அனைவரும் நாங்கள் நாடும் தகவல்களைக் கொண்டுள்ள பொருத்தமான நபர்கள் தானா என்பதை ஒவ்வொருவராக உறுதிப்படுத்த எங்களால் இயலாது. அதனால், HRMI தூதுவர்கள் தங்களுடைய நாட்டில் இந்தக் கருத்தாய்வில் பங்கேற்கக்கூடிய சாத்தியமான நபர்களை தொடர்பு கொள்ளவும், கணக்கெடுப்பை நடத்துவதன் மற்ற பகுதிகளில் (எடுத்துக்காட்டாக, உள்ளூர் மொழிபெயர்ப்புகளைச் சரிபார்த்தல் போன்றவற்றில்) உதவ முடியும் என்பதாலும், நாங்கள் இவற்றுக்கு அவர்களைச் சார்ந்திருக்கிறோம். தூதுவர்கள் உள்ளூர் பயிற்சியாளர்களைத் தொடர்புகொள்ளும் போது, அவர்கள் கருத்தாய்வில் பங்கேற்கக்கூடிய மற்றவர்களைப் பரிந்துரைப்பார்கள். இதைத்தான் ஸ்நோ பால் எஃபெக்ட் (snowball effect) என்று நாம் அழைக்கிறோம்.

வேறுவிதமாகச் சொல்வதென்றால், எங்கள் HRMI தூதுவர்கள் கருத்தாய்வுக்குப் பதிலளிக்கக்கூடியவர்களை அணுகி, அவர்களைப் பங்கேற்க அழைப்பதன்மூலம் snowball செயல்முறையைத் தொடங்குகிறார்கள். அதன்பிறகு, அந்த மக்கள் எல்லோரிடமும் மேலும் பெயர்களைப் பரிந்துரைக்கும்படி நாம் கேட்கிறோம்.

நம் தூதுவர்கள் மிகப் பெரிய உதவிகளைச் செய்கிறார்கள்! பொதுவில் பெயர் வெளியிடப்பட்டுள்ள நம்முடைய தூதுவர்களை நீங்கள் நம்முடைய குழுப் பக்கத்தில் சந்திக்கலாம்.

மொசாம்பிக்-கைச் சேர்ந்த எங்களுடைய தூதுவர், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆய்வாளர், தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லுசோஃபோன் நாடுகளைக் கண்காணிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தும் டேவிட் மட்சின்ஹெ அவர்களுடைய சிறு காணொளிப் பேட்டி, இதோ:

எங்கள் YouTube சானலில் உள்ள மற்ற வீடியோக்களில் எங்களுடைய பல தூதுவர்களைக் காணலாம்.

உங்களுக்கு நன்றி!

எங்களுடைய அதி நவீனத் தரவு மற்றும் அளவீடுகள் உலகெங்கும் தங்களுடைய நேரம் மற்றும் அறிவை எங்களுக்கு வழங்கும் நூற்றுக்கணக்கான மனித உரிமை பணியாளர்களைச் சார்ந்திருக்கின்றன. நாங்கள் இதை மிகவும் பாராட்டுகிறோம்.

நீங்கள் HRMI கருத்தாய்வில் பங்கேற்கிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு எங்களின் உண்மையான மற்றும் அன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம். நீங்கள் இல்லாமல் எங்களால் இதைச் செய்ய இயலாது.

Twitter Facebook YouTube Linkedin
Go to the Rights Tracker

HRMI Privacy Policy

Web site content © HRMI. Unless otherwise noted, all content is licensed under a Creative Commons Attribution-Non Commercial 4.0 International license.

We'd like to store cookies and usage data to improve your experience.

For any website to function, it is necessary to collect a small amount of user data, so by continuing to use this website, you are consenting to that. To find out more, please read our Privacy Policy

Functional Always active
The technical storage or access is strictly necessary for the legitimate purpose of enabling the use of a specific service explicitly requested by the subscriber or user, or for the sole purpose of carrying out the transmission of a communication over an electronic communications network.
Preferences
The technical storage or access is necessary for the legitimate purpose of storing preferences that are not requested by the subscriber or user.
Statistics
The technical storage or access that is used exclusively for statistical purposes. The technical storage or access that is used exclusively for anonymous statistical purposes. Without a subpoena, voluntary compliance on the part of your Internet Service Provider, or additional records from a third party, information stored or retrieved for this purpose alone cannot usually be used to identify you.
Marketing
The technical storage or access is required to create user profiles to send advertising, or to track the user on a website or across several websites for similar marketing purposes.
Manage options Manage services Manage {vendor_count} vendors Read more about these purposes
View preferences
{title} {title} {title}
  • Use our data
    • Go to the Rights Tracker
  • See our impact
  • Get involved
  • About HRMI
    • The team
Search