கருத்தாய்வுக்குப் பதிலளிப்பவர்களுக்கான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
HRMI? Her-me? Her-mi?
‘மனித உரிமைகள் அளவிடல் முன்னெடுப்பு’ என்பது சற்றுப் பெரிய பெயர்தான். அதனால் நாங்கள் அதைச் சுருக்கமாக HRMI என்று அழைக்கிறோம், இது ‘her-mee’ (ஹெர்-மீ) என்று உச்சரிக்கப்படுகிறது.
“நாடுகளின் மனித உரிமைகள் செயல்திறனை ஒப்பிடும் தரவானது அரசாங்கங்களைப் பொறுப்பேற்கச் செய்வதற்கான ஒரு பயனுள்ள வழியாகும். மனித உரிமைகள் அளவிடல் முன்னெடுப்பின் பணி, மிகச் சிறந்த சாத்தியமுள்ள தரவை உருவாக்கவும், பகிர்ந்துகொள்ளவும், மற்றும் முடிவுகளைப் பயன்படுத்தவும் எல்லா இடங்களிலும் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பைச் சார்ந்திருக்கிறது.”
– கென் ரோத், நிர்வாக இயக்குனர், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு
HRMI என்பது நாடுகளின் மனித உரிமைகளின் செயல்திறனைக் கண்காணிக்கும் முதல் உலகளாவிய திட்டமாகும். நாம் இதனை மேற்கொள்ளும் பிரதான வழிகளில் ஒன்றாக இருப்பது, எங்களின் வருடாந்திர HRMI கணக்கெடுப்பு மூலம் வருடாந்திர தரவுகளை சேகரித்தல் ஆகும்.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் நிர்வாக இயக்குனர் கென் ரோத் சொல்வதுபோல், “நாடுகளின் மனித உரிமைகள் செயல்திறனை ஒப்பிடும் தரவானது அரசாங்கங்களைப் பொறுப்பேற்கச் செய்வதற்கான ஒரு பயனுள்ள வழியாகும். மனித உரிமைகள் அளவிடல் முன்னெடுப்பின் பணி, மிகச் சிறந்த சாத்தியமுள்ள தரவை உருவாக்கவும், பகிர்ந்துகொள்ளவும் மற்றும் முடிவுகளைப் பயன்படுத்தவும் எல்லா இடங்களிலும் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பைச் சார்ந்திருக்கிறது.”
எங்கள் தரவுத் திரட்டலில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளின் மிகச் சமீபத்திய பட்டியலுக்கு, இடம்பெற்றுள்ள நாடுகள் என்ற பக்கத்தைத் தயவுசெய்து பாருங்கள்.
இந்தக் கருத்தாய்வு எப்படி நடக்கிறது, மற்றும் நீங்கள் இதில் எப்படிப் பங்கேற்கலாம் என்பது பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்களுக்கு நன்றி!
எங்களுடைய அதி நவீனத் தரவு மற்றும் அளவீடுகள் உலகெங்கும் தங்களுடைய நேரம் மற்றும் அறிவை எங்களுக்கு வழங்கும் நூற்றுக்கணக்கான மனித உரிமை பணியாளர்களைச் சார்ந்திருக்கின்றன. நாங்கள் இதை மிகவும் பாராட்டுகிறோம்.
நீங்கள் HRMI கருத்தாய்வில் பங்கேற்கிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு எங்களின் உண்மையான மற்றும் அன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம். நீங்கள் இல்லாமல் எங்களால் இதைச் செய்ய இயலாது.